நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தைச் சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு நேற்று குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 45 நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்ததைத் தொடர்ந்து சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 8 ரூபாய் 22 காசுகள் குறைந்து 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசுகள் குறைந்து 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலைக் குறைப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.