இரண்டாவது நாளாக இவ்வளவு விலை உயர்வா? – மக்கள் பேரரதிர்ச்சி

ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்ததால், கடந்த 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் விலை நேற்று அதிகரித்தது. அதன்படி, நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து 102.16 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து 92.19 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் 2 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 0.75 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 0.76 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்து முறை இருபது காசு முப்பது காசு என உயர்த்தியவர்கள் இம்முறை 76 காசுகள் உயர்த்துகிறார்கள். இதனால் மக்கள் பேரரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response