தமிழில் படித்தால் கட்டணம் இல்லை – தேர்வுத்துறை அறிவிப்பு

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலித்து சனவரி 20 ஆம் தேதிக்குள் இணையம் மூலம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநரக இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ் வழியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் கிடையாது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் எம்.பி.சி, பட்டியல் இன மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. பெற்றோர் ஆண்டு வருவாய் ரூ.2.5 இலட்சத்திற்கும் குறைவான பி.சி. மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் உண்டு எனவும் சுயநிதி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Response