பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி – ஏற்றியது எவ்வளவு? குறைத்தது எவ்வளவு?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.

ஆனால், கச்சா எண்ணெய் விலை குறையும்போது கூட, அதன் பலன் மக்களுக்குக் கிடைக்காத வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு உயர்த்தி வந்தது.

2014 ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பதவி ஏற்றதில் இருந்து பல முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.48 என இருந்தது. இது ரூ.32.90 ஆக உயர்ந்தப்பட்டது. அதாவது சுமார் மூன்றரை மடங்கு உயர்ந்து விட்டது.

இதுபோல், டீசல் மீதான கலால் வரி 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு 9 முறை உயர்த்தப்பட்டது. 2014 இல் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3.56 ஆக இருந்தது. இது ரூ.31.80 ஆக உயர்த்தப்பட்டது.

இவ்வாறு பல முறை உயர்த்தப்பட்ட பிறகு, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5 மற்றும் டீசலுக்கு ரூ.10 மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Response