இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மக்கள் கோபம்

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை இலிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.

அதிலிருந்து, சென்னையில் பெட்ரோல் இலிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் இலிட்டர் ரூ 93.93 ஆகவும் விற்பனையானது.

அதிலிருந்து 23 நாட்கள் அமைதியாக இருந்தது மோடி அரசு.

செப்டம்பர் மாத இறுதியிலிருந்து நாள்தோறும் விலையை உயர்த்திவருகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் முந்தைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ.97.59க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ரூ.102.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து ரூ.97.93க்கு விற்பனையானது.

இன்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.102.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.98.26க்கு விற்பனை ஆகிறது.

தொடர் விலையேற்றம் மோடி அரசின் மீது மக்களின் கோபத்தை அதிகரித்துவருகிறது.

Leave a Response