மரநடுகை மாதத்தின் முதல்நாளில் 5000 பனைவிதைகள்

வடமாகாண மரநடுகை மாதத்தின் தொடக்க நாளான நேற்று அராலி ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தால் 5000 பனைவிதைகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.

பனை அபிவிருத்திச் சபையின் அனுசரையுடன் வழங்கப்பட்ட இப்பனம் விதைகள் பூனாவோடை இந்து மயானப்பகுதியில் நடுகை செய்யப்பட்டுள்ளன.

வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு, சம்பிரதாயபூர்வமாகப் பனம் விதைகளை நாட்டி வைத்தார். தொடர்ந்து, அராலிப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்களும் பெரியவர்களுமாக இணைந்து நடுகையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் வலி மேற்கு பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் த. நடனேந்திரன், வலி மேற்கு பிரதேசசபையின் செயலாளர் உ.சாரதா, பனை அபிவிருத்திச்சபையின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ம. கியூபேட் ஆகியோரும் பங்கேற்றிருந்தார்கள்.

பனைவிதை நடுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response