மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்….
தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் ஈழத் தமிழ் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் பல தமிழ்நாட்டிலேயே பிறந்தவையாகும். இந்தப் பிள்ளைகள் முகாம்களின் அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றன. மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுத அவர்கள் விரும்பிய போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. உடனடியாக தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் குறிப்பிட்ட அளவுக்கு இடம் அவர்களுக்கு ஒதுக்கி நீட் தேர்வு எழுதவும் அவர்களை அனுமதிக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கோரியுள்ளார்.