நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.கூட்டத்தொடர் தொடங்கியதும் மக்களவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த விஜய்வசந்த், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் குருமூர்த்தி, பாஜகவின் சுரேஷ் அங்காடி, ஐ.யூ.எம்.எல். கட்சியின் அப்து சமாத் சமதான் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய்வசந்த் தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.பதவிப்பிரமாணத்தில் அவர் கூறியதாவது,
கன்னியாகுமரி தொகுதி மக்கள் சபையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பெற்ற ஹரிகிருஷ்ணபெருமாள் நாடார் வசந்தகுமாரின் மகனாகிய விஜயகுமார் என்கிற விஜய்வசந்த் எனும் நான், சட்டபூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பில் உண்மையான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும் நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன். ‘பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி புகழ் வாழ்க’
இவ்வாறு சொல்லி அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.