இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூபாயைத் தொட்டுள்ளது.

சென்னையில் நேற்று ஒரு இலிட்டர் பெட்ரோல் ரூ.98.65-க்கும், ஒரு இலிட்டர் டீசல் ரூ.92.83-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஒரு இலிட்டர் பெட்ரோல் விலை 23 காசு அதிகரித்து ரூ.98.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு இலிட்டர் டீசலின் விலை 6 காசுகள் அதிகரித்து ரூ.92.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைத் தவிர்க்க பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Response