மோடி நாசமாகத்தான் போவார் – பெட்ரோல் விலை உச்சத்தால் மக்கள் சாபம்

இந்திய ஒன்றியத்தில்,கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

பல மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.69 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.91 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து 92.04 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

கொரோனா முடக்கத்தால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி நாள்தோறும் விலையேற்றி எங்கள் வயிற்றிலடிக்கும் மோடி நாசமாகத்தான் போவார் என்று மக்கள் சாபம் விடுகின்றனர்.

Leave a Response