45 தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியல் – அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்குச் சிக்கல்

அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடப்பட்டது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள நிலையில் அங்கு போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் விவரம்….

1.கோவில்பட்டி டிடிவி தினகரன், 2.குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், 3. ராமநாதபுரம் முனுசாமி, 4.திருநெல்வேலி பாலகிருஷ்ணன் என்கிற பால்கண்ணன், 5. திருப்போரூர் கோதண்டபாணி,6.கிணத்துக்கடவு ரோகிணி கிருஷ்ணகுமார், 7.மன்னச்சநல்லூர் தொட்டியம் ராஜசேகரன், 8.முதுகுளத்தூர் முருகன், 9.மதுரவாயல் லக்கி முருகன், 10. மாதவரம் தட்சிணாமூர்த்தி, 11.பெரம்பூர் லட்சுமி நாராயணன், 12.சேப்பாக்கம் எல்.ராஜேந்திரன், 13.அணைக்கட்டு சத்யா என்கிற சதீஷ்குமார், 14.திருப்பத்தூர் ஞானசேகர்,

15. ஓசூர் மாரே கவுடு, 16.செய்யாறு வரதராஜன், 17. செஞ்சி கௌதம் சாகர், 18. ஓமலூர் கேகே மாதேஸ்வரன், 19. எடப்பாடி பூக்கடை சேகர், 20.பரமத்திவேலூர் பிபி சாமிநாதன், 21. திருச்செங்கோடு ஹேமலதா, 22.அந்தியூர் செல்வம், 23. குன்னூர் கலைச்செல்வன், 24. பல்லடம் ஜோதிமணி, 25.கோவை வடக்கு அப்பாதுரை, 26.திண்டுக்கல் ராமதேவர், 27.மன்னார்குடி காமராஜ், 28. ஒரத்தநாடு மா சேகர், 29. காரைக்குடி தேர்போகி பாண்டி, 30. ஆண்டிபட்டி ஜெயக்குமார்,

31. போடிநாயக்கனூர் முத்துசாமி, 32. ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கீதப்பிரியா சந்தோஷ்குமார், 33. சிவகாசி சாமிகாளை,34.திருப்பரங்குன்றம் மதுரை, 35.மானாமதுரை மாரியப்பன் கென்னடி, 36. தாம்பரம் கரிகாலன், 37.திருவையாறு கார்த்திகேயன், 38.தியாகராயநகர் பரமேஸ்வரன், 39. திருப்பூர் தெற்கு விசாலாட்சி, 40. விழுப்புரம் பாலசுந்தரம், 41.சாத்தூர் ராஜவர்மன், 42.பொன்னேரி பொன் ராஜா, 43. பூந்தமல்லி, ஏழுமலை, 44. அம்பத்தூர், வேதாச்சலம், 45. சேலம் தெற்கு வெங்கடாசலம்

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்பாளராக மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டிடிவி தினகரன் போட்டியிடுவதன் மூலம் போட்டி கடுமையாகியுள்ளது.

கோவில்பட்டி தொகுதி பாரம்பரியமாக கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வெல்லும் தொகுதி. 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக இங்கு தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகிறது.

இம்முறை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் வலுவாகக் களம் இறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கடம்பூர் ராஜூக்கு மேலும் சிக்கலை அளிக்கும் விதமாக டிடிவி களம் இறங்கியுள்ளார்.

அதேபோல் அதிமுகவில் சீட் கிடைக்காத சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் இன்று காலை அமமுகவில் இணைந்தார். அதிமுகவில் வாய்ப்பு கேட்ட அவருக்கு சாத்தூர் தொகுதியை கட்சித்தலைமை ஒதுக்காமல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சைக்கேட்டு வேறு நபருக்கு சாத்தூர் தொகுதியை ஒதுக்கியதால் தான் விலகி அமமுகவில் இணைவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் காலையில் கட்சியில் இணைந்து விருப்பமனு அளித்த அவருக்கு இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Leave a Response