சசிகலாவுக்கு எதிராக சதி அவர் உயிருக்கு ஆபத்து – சகோதரர் அச்சம்

சசிகலாவின் தம்பி திவாகரன், மன்னார்குடியில் நேற்று அளித்த பேட்டியில்….

பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருக்கும் எனது சகோதரி சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. அந்தச்சிறையில் எந்தவிதமான மருத்துவ வசதிகளோ, மருத்துவர்களோ இல்லை என கூறப்படுகிறது.

இதனால், நேற்று (நேற்றுமுன்தினம்) அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமானதால் பயந்துபோன சிறைத்துறை அதிகாரிகள் சிறை கைதிகளுக்கென அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

சசிகலா அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது மூச்சுத் திணறலோடு அதிக இரத்த அழுத்தத்தோடு இருந்துள்ளார்.

நேற்று (நேற்றுமுன்தினம்) நள்ளிரவு வரை அவருக்கு எந்தவித சிகிச்சையோ, மருந்துகளோ கொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் எக்ஸ்ரே கூட எடுக்கப்படவில்லை.

அவரைக் காப்பாற்ற முடியுமா என அச்சம் எழுகிறது. அங்கு நேற்றுமுன்தினம் பணியில் இருந்த மருத்துவர் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது சசிகலாவிற்கு எதிராக ஏதோ சதி நடப்பதாக எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. அவர், 27 ஆம் தேதி விடுதலையாகி தமிழகம் வருவதை சிலர் விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response