யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் – நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் இராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர்.
நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து *சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று காலை 11 மணிக்கு வைகோ தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில், தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், கழகக் கண்மணிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன் என்று வைகோ வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளீயிட்டுள்ள அறிவிப்பில்…
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் மற்றும் மாவீரர் நாள் நினைவுத் தூண்களை சிங்களப் பேரினவாதம் இடித்து தள்ளியது. இப்போக்கைக் கண்டித்து 11.1.2021 அன்று
காலை 10 மணிக்கு இலங்கை தூதரகம் முற்றுகைப்போராட்டம் நடத்துவதாக மதிமுக அறிவித்துள்ளது.
இப்போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் பங்கேற்கிறது. தோழர்கள் யாவரும் தவறாமல் பங்கேற்கவும்
என்று கூறியுள்ளார்.
அதேபோல திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்.இரவோடு இரவாக ராஜபக்சே அரசு இடித்துத் தள்ளுவதா? ம.தி.மு.க. நடத்தும் அறப் போராட்டத்திற்குத் திராவிடர் கழகம் ஆதரவு என்று அறிவித்துள்ளார்.