கூட்டணிக்காகப் பலகோடி பேரம் பேசும் பாமக – தயாநிதிமாறன் வெளிப்படை

சென்னை பாரிமுனையில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்துகொண்டார்.

அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பாமக எப்போதும் வன்முறையை நம்பியிருக்கும் கட்சி. ஆனால் திமுக பனங்காட்டு நரி என்பதால் அந்தச் சலசலப்புக்கு அஞ்சாது என்று கூறினார். கூட்டணிக்காக பாமக பல கோடி ரூபாய் பேரம் பேசி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இதை வெளிப்படுத்தினால் தாக்க முயற்சி செய்கிறார்கள்.

கூட்டணிக்காகப் பணம் வாங்கவில்லை என்றால் அதை மறுப்பதற்கு ராமதாசும் அன்புமணியும் தயாராக இல்லை.
அவர்கள் என்னோடு விவாதிக்கத் தயார் என்றால் நானும் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்

இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார்.

கூட்டணிக்காக பல கோடி ரூபாய் பேரம் நடக்கிறது என்று தயாநிதிமாறன் வெளிப்படையாகக் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response