
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய மட்டைப்பந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. விராட் கோலி 63 ரன்கள், ஜடேஜா 66- ரன்கள் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 76- பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப்போட்டியில் தமிழக வீரர் நடராஜன் முதன்முறையாக பங்குபெற்று விளையாடினார். அவர் கலந்துகொள்ளும் முதல் சர்வதேசப் போட்டி இது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தமிழக இரசிகர்கள் கூடுதலாகக் கொண்டாடிவருகிறார்கள்.
போட்டியின் 6 ஆவது ஓவரில் நடராஜன் வீசிய பந்தில் ஆஸ்திரேலிய வீரர் லபூஷக்னே ஆட்டமிழந்தார்.
தமிழக வீரர் எடுத்த முதல்விக்கெட் என்பதால் தமிழக முதல்வர் உட்பட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
