இந்திய அரசுக்குக் கண்டனம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் – பழ.நெடுமாறன் அறிக்கை

கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்காக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு, கல்வி உதவித் திட்டத்தை அறிமுகம் செய்து அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது.

அந்த வழிகாட்டுதலின்படி, இன்றளவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் பலர் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இதுபோன்ற கல்வி உதவித் தொகையை நம்பி உயர் கல்வி படித்து வருகின்றனர்.

இந்நிலையில்,இந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை திடீரென மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையொட்டி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…….

11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 18,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வந்ததை இந்திய அரசு நிறுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்நடவடிக்கை அம்மாணவர்களின் படிப்பை அழிக்கும் நடவடிக்கையாகும்.

இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு இந்த உதவித் தொகையை தொடர்ந்து அளிக்கவேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துவதோடு, அவ்வாறு செய்ய மத்திய அரசு மறக்குமானால், தமிழக அரசு இம்மாணவர்களுக்கு அளித்துவரும் உதவியோடு, இந்தப் பணத்தையும் சேர்த்து அளிக்குமாறு தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response