வியர்வை வீண்போகாது வென்றே தீர்வோம் – சீமானுக்கு பாரதிராஜா வாழ்த்து

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 55 ஆவது பிறந்தநாள் இன்று.

இந்நாளையொட்டி நாம் தமிழர் கட்சியினர் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழார்வலர்கள் அவருக்கு வாழ்த்துச் சொல்லி வருகின்றனர்.

ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவரைப்பற்றிய புகழுரைகளும் அவருக்கான வாழ்த்துச்செய்திகளும் நிறைந்திருக்கின்றன.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா வெளீயிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்….

நம் இனத்துக்கான
உன் போராட்டங்களும்
உன் வார்த்தைகளும்…
இங்கு உற்று கவனிக்கப்படுகிறது.
உன் வியர்வை
வீண் போகாது..
உரமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது..
இளைஞர்களின்
அரசியல் ஆசானே.
ஒரு நாள் வென்றேத் தீர்வோம்..
பேரன்பு கொண்ட மகன் செந்தமிழ் சீமானே
வாழ்த்துகள்.

இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்தியுள்ளார்.

Leave a Response