விஜய் அரசியல் கட்சி தொடங்கினார் – செய்தியும் மறுப்பும்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவிருக்கிறார் என்று சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று மாலை, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்குகிறார் என தகவல் வெளியானது. கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் சின்னம் உள்ளிட்ட விவரங்களை விரைவில் விஜய் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியானது.

தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பெயர் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இச்செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே விஜய் தரப்பிலிருந்து அதற்கு மறுப்பு வெளியிடப்பட்டது. அச்செய்தியில் உண்மையில்லை என்று மட்டும் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், அந்தப் பெயரில் கட்சியைப் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன் என்று சொல்லியிருக்கிறார்.

Leave a Response