முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் வி.கே.சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார்.
மூன்றரை ஆண்டுகள் தாண்டி அவருடைய சிறைவாசம் தொடரும் நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்,
இன்னும் ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளது. காரணம் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறைக் கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையைப் பெற முடியும்.
எனவே சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.