திட்டக்குடி இளைஞர் கைது – பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மோதல்

அபுதாபியில் இருந்தவாறு,பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசை விமர்சிக்கும் வகையில், மிக மோசமான வெறுப்பு கருத்துகளை முகநூலில் எழுதியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, திட்டக்குடி உத்தமராஜா என்பவர் தமிழகம் திரும்பிய நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையொட்டி பாமகவினர், சமூக ஊடகங்களில் வெறுப்பை பரப்புவோரை சட்டப்படி தண்டிக்க உதவுங்கள்.
ஒரு நபர் வெறுப்பை நம்மீது உமிழ்கிறார் என்பதற்காக, பதிலுக்கு பதில் நாமும் மோசமான எதிர்வினைகளை சமூக ஊடகம் மூலம் தெரிவிக்கக் கூடாது. தனிநபர்கள், சாதி, மதம், மொழி, இனம், அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக எந்தவொரு வெறுப்புக் கருத்தையும் (Hate Speech) ஒருபோதும் சமூக ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்பதுவே பாமக தலைமையின் நிலைப்பாடு ஆகும். நன்றி.

இவ்வாறு பாமகவினர் பதிவிட்டு வருகிறார்கள்.

கைது செய்யப்பட்டவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்தவராம்.அதனால் அக்கட்சியினர்,

வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்த திட்டக்குடி உத்தமராஜா வன்னியர் அவர்களை ராமதாஸ் தூண்டுதலின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களைப் பழிவாங்கத் துடிக்கும் ராமதாஸ் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவர்

இவ்வாறு அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Response