பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொரோனா அச்சத்தின் காரணமாக இந்திய ஒன்றியம் முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.இதன்காரணமாக தமிழகத்தில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழக அரசு.

அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி தேர்வு தொடங்குகிறது. ஜூன் 12 ஆம் தேதி நிறைவடைகிறது.

அதற்கான அட்டவணை…

ஜூன் 1- மொழிப்பாடம்
ஜூன் 3- ஆங்கிலம்
ஜூன் 5- கணிதம்
ஜூன் 6- விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 8- அறிவியல்
ஜூன் 10- சமூக அறிவியல்
ஜூன் 12- தொழிற்பிரிவு தேர்வு

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response