டெல்லியில் சுற்றித்திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – இந்தி தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

.

டெல்லியில் உள்ள இந்தியா கேட்அருகில், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இரண்டு சொகுசுப் பேருந்துகளில் மிக தைரியமாகப் பயணம் செய்கின்றனர்.அதுவும் சுற்றுலா வழிகாட்டி துணையுடன்.

இந்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர், அவர்களைத் தடுத்து, கேட்ட கேள்விக்கு, தகுந்த பதில் கிடைக்கவில்லை.

அவர்கள் உத்தரகாண்ட்டின் டேராடூனிலிருந்து டெல்லி வந்ததாகவும், டெல்லியைச் சுற்றிப் பார்த்து விட்டு ஏர்போர்ட் செல்லவிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அதற்கான தகுந்த அனுமதி கிடைத்துள்ளது எனக் குறிப்பிடுகிறார்கள். மேலும் செய்தியாளர், கேட்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மறுக்கிறார்கள்.

ஏர்போர்ட் லாக் ஆகியிருக்கும் இந்த சமயம், அவர்கள் எங்கே செல்கிறார்கள் ? இவர்களுக்கு அனுமதி யார் கொடுத்தது..?

இவர்களின் பயணம் காவல்துறையின் அனுமதியுடன்தான் நடைபெறுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

காவல்துறையிடம் விசாரித்தால் விவரம் கூற மறுக்கிறார்கள். மேலிடத்து அதிகாரிகளிடம் சென்று விசாரிக்கச் சொல்கிறார்கள் என்கிறார் செய்தியாளர்.

இப்போது கொரோனா வைரசின் தாக்கத்தால் இந்தியாவே ஊரடங்கில் உள்ள சூழலில், Social Distance ஐ பேணும் படி வற்புறுத்தும் அரசின் ஆணை அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு விட்டு கவலை இல்லாது சுற்றும் இந்த வெளிநாட்டவரை நினைக்கும் போது,சட்டம், பாதுகாப்பு, நடவடிக்கை.. இவை, எல்லாம் யாருக்காக எனும் கேள்வி எழுகிறது?

இவர்களுக்கு அனுமதி கிடைத்தது, கொடுத்தது, எப்படி என்பது பெரிய கேள்விக்குறியாகவும் உள்ளது.

டெல்லி தப்லீக் மாஅத், social distance -ஐ- கடைப்பிடிக்கவில்லை, எனும் சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் 100 பயணிகள் ஒரு பேருந்தில் பயணிப்பது எவ்வாறு சாத்தியமானது..?

அதிகாரிகள் இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கண்டு கொள்ளாதது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.

இவர்கள் (வெளிநாட்டினர்) எங்கிருந்து வந்தார்கள்.? எங்கே செல்லவிருக்கிறார்கள்.? இவர்கள் முறையான மருத்துவ சோதனைகட்கு உட்படுத்தப்பட்டார்களா.? எனும் விபரங்கள் தெரிய முறையான விசாரனை நடத்த வேண்டுமென தெரிவிக்கிறது அந்த தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பு

Leave a Response