வெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க

கொரோனா எதிரொலியாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.அதேநேரம் காய்கறி மளிகைப் பொருட்கள், மருந்துகள் ஆகியன விற்பனை செய்யப்படுகிறது.

அவற்றை வாங்குவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்களை காவல்துறையினர் எந்தக்கேள்வியும் இல்லாமல் அடிக்கிறார்கள்.

அடிப்பதோடு அதைப் படம்பிடித்து சமூகவலைதளங்களிலும் பரப்பிவருகிறார்கள்.இதைப்பார்த்தாவது மற்றவர்கள் வெளியே வராமல் இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இச்செயலைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இந்நிலையில், ஈரோட்டில் ஒருவர் அரிசி காய்கறி மளிகை வாங்கச் செல்கிறேன் என்று தனது வாகனத்தின் முன்னால் பலகையில் எழுதிவைத்துக் கொண்டு சென்றார்.

Leave a Response