கேரளாவிலிருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றமா? நடந்தது என்ன? – ஒரு விளக்கம்

வலுக்கட்டாயமாக வெளியேற்றம்?! -கேரளாவின் செயலால் தெருவில் தஞ்சமடைந்த தமிழக தொழிலாளிகள் என்கிற தலைப்பில் ஜூனியர் விகடன் ஏட்டில் ஒரு செய்தி மார்ச் 26 அன்று வந்திருந்தது.

அதர்கு மறுப்புச் சொல்லும் விதமாக தமுஎகச கோவை முகநூல் பதிவில் வந்திருக்கும் செய்தி….

கேரளம்,கண்ணூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடப்பணிகள் மற்றும் கூலிப் பணிக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொரோனோ நோய்ப் பரவல் எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேலை இல்லாததால் கடந்த 25.03.2020 அன்று மாலை தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல 50 க்கும் மேற்பட்டோர் கண்ணூர் பேருந்து நிலையத்துக்கு வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் உள்ளிட்ட அனைவரும் அங்கு கூடியிருந்த தமிழக மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அங்கு நடந்த பேச்சுவார்த்தை பின்வருமாறு…..

தற்போது உள்ள சூழலில் ஊரடங்கு அமலில் உள்ளதால், உங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாது . நாங்கள் இங்கு உங்களை அனுமதித்தாலும் தமிழக எல்லையில் உங்களது காவல்துறையினர் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, தாங்கள் அனைவருக்கும் தங்குவதற்கான இடத்தையும்,உணவையும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கேரள அரசின் சார்பாக உரிய பாதுகாப்புடன் தருகின்றோம் தயவுசெய்து ஒத்துழையுங்கள் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலையில் வருத்தத்தில் இருந்த தமிழகத் தொழிலாளர்களும் அதைப் பின்பற்றினர் என்பதுதான் உண்மைச் செய்தி.

ஆனால், விகடன் குழுமமோ பேச்சுவார்த்தைக்காகக் காத்திருந்த தமிழகத் தொழிலாளர்களின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தமிழகம்-கேரள மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியில் வெளியிட்டுள்ள
பொய் பிரச்சாரச் செய்தியினை அம்பலப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம்.

வதந்திகளை நம்பாதீர்கள்… பிரதமர் நரேந்திர மோடி கூறியது அது மட்டுமின்றி தமிழகத்தின் முதல்வரும் கூறியிருக்கிறார்…

இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றால் கேரளத்தில் உங்களுக்கு யாரேனும் தொடர்பில் இருந்தால் அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்து பாருங்கள்..

நாங்கள் கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் என்றும் மக்களுக்கு அவர்கள் மக்களோடு மக்களாக இருப்பவர்கள்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response