மோடி முடிவுக்கு கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு பதவி இழப்பீர் என்று சீற்றம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ஒன்றிய அரசும் எல்லா மாநில அரசுகளும் எடுத்துவருகின்றன.இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக தெரிவித்து இருந்தார்.அதன்படி மோடி இரண்டாவது முறையாக மார்ச் 24 அன்று உரையாற்றினார்.

அவரது உரையில், மார்ச் 24 நள்ளிரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்தார். இஃத 21 நாட்களும் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மோடி பேசி முடித்ததுமே அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…

உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்கச் சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.

அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்.

இவ்வாறு கடுமையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.

Leave a Response