விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை – திமுக கொள்கை பரப்புச்செயலர் கருத்து

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மயிலாடும்பாறைக்கு வந்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

வருமான வரித்துறை சோதனைக்குப் பயந்தே, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான செயல்பாடுகளில் அதிமுக ஈடுபடவில்லை.

நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகத்தின் வெளிப்பாடாக உள்ளது. மத்திய பாஜக அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழகத்தில் திமுகவுக்கு மட்டுமே உள்ளது.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் கட்சிக்கும் ஆட்சிக்கும் வெவ்வெறு தலைமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. அவ்வாறு இருந்தால் கட்சியே ஒரு நிலைப்பாட்டுக்கு வராது

இவ்வாறு அவர் கூறினார்.

விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடப்பது பாஜக அரசின் அதிகாரமீறல் என்று இவர் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response