அடுத்தடுத்து 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவு – திமுக அதிர்ச்சி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த காத்தவராயன் சிகிச்சை பலனின்றி இன்று காலை (பிப்ரவரி 28) உயிரிழந்துள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பதவி பறிப்பு காரணமாக 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு காத்தவராயன் வெற்றி பெற்றார். காத்தவராயன் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வந்தார்.

திருவெற்றியூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கேபிபி சாமி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 2 நாளில், 2 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதால் சட்டப்பேரவையில் திமுகவின் பலம்
100 இலிருந்து 98 ஆகக் குறைந்துள்ளது.

நேற்று ஒரு உறுப்பினர் இன்றொரு உறுப்பினரை இழந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

Leave a Response