டெல்லி தாக்குதலில் ஈடுபட்ட கொடுங்கோலர்களை உடனே கைது செய் – சீமான் கோரிக்கை

டெல்லியில் பாஜகவின் மாணவர் அமைப்பினர் நடத்திய கொலைவெறித் தாக்குதல்களுக்கு இந்தியா முழுதும் கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி சீமான் அந்நிகழ்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது….

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூக விரோதிகள், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்.

விடுதி கட்டண உயர்வு தொடங்கி குடியுரிமைச்சட்டத்திருத்தம் வரை அநீதிக்கெதிராகக் களத்தில் சமரசமற்று நிற்கும் மாணவப்பிள்ளைகளுக்கு ஆளும் வர்க்கத்தால் நேரடியாக விடப்பட்டிருக்கிற கொலைமிரட்டல், அச்சுறுத்தல்!

தாக்குதலில் ஈடுபட்ட கொடுங்கோலர்களை உடனடியாகக் கடுஞ்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response