அரசியலுக்கு முழுக்கு – சரத்குமார் முடிவு?

சரத்குமார் மீண்டும் அதிகப் படங்கள் கைவசம் வைத்து தீவிரமாக நடிக்கத் தொடங்கி உள்ளார். வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களில் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அண்மையில் சரத்குமார் அளித்த பேட்டியில்,அரசியல் பணிகளுக்கு இடையில் சினிமாவிலும் நடித்து வருகிறேன். அரசியலை நான் தொழிலாக செய்யவில்லை ஒரு பணியாகவே செய்கிறேன். சினிமாதான் எனது தொழில். மக்களுக்கு சேவை செய்யவும் கட்சி நடத்தவும் சினிமாவில் சம்பாதிக்க வேண்டி உள்ளது. அதனால்தான் சமீப காலமாக அதிக படங்களில் நடிக்கிறேன்.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாராகும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால், அரசியலில் வெற்றி பெற முடியாமல் போனதால் திரைப்படங்களில் மட்டும் தீவிர கவனம் செலுத்துகிறார் என்று அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக் ஆகியோர் போல் அரசியலை விட்டுவிட்டு திரைப்படங்களில் மட்டுமே நடிக்க சரத்குமார் முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில் அவருடைய பேட்டி அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Leave a Response