மாவீரர் மாதத்தில் மரநடுகை – யாழில் தொடங்கியது

யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண சபையின் அறிவிப்புக்கு அமைவாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் நல்லுhர் கிட்டு பூங்கா எனும் சங்கிலியன் பூங்காவில் 20.11.2019 அன்று நடைபெற்றது.

போரில் வீரமரணமடைந்த போராளியின் தாய் சுடரேற்றி விழாவை தொடங்கிவைத்தார்.

அதுசமயம் அங்கு மலர்க் கண்காட்சியும் நடத்தப்பட்டது.அதை கார்த்திகைப் பூச்சூடி விருந்தினர்களால் கோலாகலமாகத் திறந்து வைத்தனர்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணியின் தலைவர் த.யூகேஸ் தலைமையில் நடைபெற்ற இம் மலர்க்கண்காட்சித் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா மதிப்புயர் விருந்தினராகத் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதியும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந் நிகழ்ச்சியில் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற , அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஐயசூரிய ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றியிருந்தனர்.

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்த இவ்விழாவில் தொன்மம் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சியும், நீர்வை பொன்சக்தி கலாகேந்திரா நிறுவனத்தின் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இவ் விழாவில் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழுகின்ற 50 மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

வடக்கின் தாவர உற்பத்தியாளர்கள் காட்சிக் கூடங்களை அமைத்துள்ள இம் மலர்க்கண்காட்சி நவம்பர் 25 ஆம் தேதி வரை நடைபெறும்.

கண்காட்சியைப் பார்வையிட வருகின்ற மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது.

Leave a Response