அண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எதிராக நடிகை காயத்ரிரகுராம் மோசமான விமர்சனங்கள் வைத்தார். இந்துமத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராகப் புகார் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில்,இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது….

தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த பேராளுமையாகத் திகழும் அன்பின் அண்ணன் திருமாவளவன் அவர்களைக் கொச்சைப்படுத்தி தனிமைப்படுத்தும் நோக்கோடு அவருக்கெதிராக அவதூறு பரப்பும் மதவாதிகளின் நச்சுப்பரப்புரையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற இக்கோழைத்தனங்கள் அநாகரீகம்; அருவெறுப்பின் உச்சம். இச்சூழலில் அண்ணன் திருமாவுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response