சிங்கள அதிபரானார் கோத்தபய ராஜபக்ச – வாக்குகள் விவரம்

இலங்கையில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது.இலங்கை முழுவதும் 22 மாவட்டங்களில் 12,845 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1 கோடியே 60 லட்சம் வாக்காளர்களில் எண்பது விழுக்காட்டினர் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

நேற்றிரவு எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்று காலையிலிருந்து முடிவுகள் வரத்தொடங்கின.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச 6,924,255 (52.25%) வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும், நுவரெலியா, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாச, சுமார் தொண்ணூறு விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, பதுளை, அனுதராபுரம், பொலன்னறுவை, குருணாகல் மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் கோத்தாபய அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

இந் நிலையில் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று, இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய நாளைய தினம் அனுராதபுரத்தில் ஜனாதிபதியாக பதவியேற்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response