என்னைத் தூக்கி விட்டவர் எஸ்.ஜே. சூர்யா -விஜய்

இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் நடித்து இயக்கி இசையமைக்கும் படம் ‘இசை’.இது இசையமைப்பாளர் சம்பந்தப்பட்ட கதையும் கூட.
எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி நடித்துள்ளனர்.
எஸ்.எஸ். புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்பையா தயாரித்துள்ளார்.
‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியிள் ஏ.ஆர். முருகதாஸ் பேசும்போது” எஸ்.ஜே.சூர்யா சாரைப் பற்றிப் பேசும் போது சீரியல் அளவுக்குப் பேச முடியும்.
17 ஆண்டுகால நட்பு எங்களுடையது. ‘குஷி’ படத்தில் அவருடனும் விஜய் சாருடனும் வேலை பார்த்ததைக் கணக்கு பார்த்தால் ‘கத்தி’ எனக்கு  விஜய் சாருடன் மூன்றாவது  படம்.

கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் சூர்யாசாரின் திறமை அபாரமானது. நான் கதாபாத்திரத்தை வடிவமைக்கும் போது அவரை மனதில் வைத்துக் கொண்டு தான் உருவாக்குவேன்.அவரது இசையார்வம் அளவிட முடியாதது.பிரபலமான பாடல்களை எல்லாம் பாடிக் காட்டுவார்.பாடகர்களின் குரல்களை எடுத்துவிட்டு இசையை ஓடவிட்டு  தானே பாடுவார்.
‘முத்து படத்தில் வரும் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலை எஸ்.பி.பி. குரலை எடுத்துவிட்டுப் அவர் பாடுவார். அவருக்கு தன் மீது அவ்வளவு நம்பிக்கை.  ஹீரோ ஆனபின் ‘சர்க்கர இனிக்கிற சக்கர’ அதே எஸ்.பி.பி. இவருக்காக பாடியது பின்னர் நடந்தது.

‘கத்தி’ படப்பிடிப்பில் ‘இசை’ படம் பற்றி விஜய் சாரிடம் கூறினேன். அவர் ‘சூர்யாசாரின் படம் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. எனக்கும் ஆவலாக இருக்கிறது’. என்றார். அதுவும் சத்யராஜ் நடித்த காட்சிகளைப் பார்த்து படம் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது.”என்றார்.

சத்யராஜ் பேசும் போது,
“நான் 2படங்கள் நடிக்க மறுத்தது உண்டு. ஒன்று ‘அமைதிப்படை’ இன்னொன்று’ இசை’ .கதை கேட்டவுடன் என் முடிவை இரண்டு படங்களுமே மாற்றியது.

75 படங்கள் வில்லனாக நடித்து விட்டு பல அசௌகரியங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு கதாநாயகனானபின்  மணிவண்ணன் சார்’அமைதிப்படை’ யில் வில்லனாக நடிக்க அழைத்தார். மறுத்தேன். கதை. கேரக்டர் சொன்னபிறகு முடிவை மாற்றினேன்.

அதே போல ‘இசை’யில் வில்லன் என்றதும் தட்டிக் கழித்தேன். தவிர்க்க நினைத்தேன்.கதை, என் கேரக்டர் பற்றிச் சொன்னதும் என் முடிவு மாறியது.

வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே இவரே கதாநாயகனாக நடிக்கிறாரே என்று நினைத்தேன். நாலாவது நாள் அவருடன் நான் நடிக்கும் போது அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன்.

எவ்வளவோ படம் பார்த்துவிட்டு ‘படம் சூப்பர்’ என்று மனசாட்சியே இல்லாமல்  பொய் சொன்னதுண்டு. இது நிஜமாகவே நல்ல படமாக வரும். முற்றிலும் புதுமையான கதை. புதுமையான காட்சிகள். கதை பிடித்தாலும் எனக்குள்ஒளிந்திருக்கும் திருடன் மூலம் நடிக்க சம்பளத்துக்கு பேரம் பேசினேன். அவரும் கொடுத்தார்.”என்றார்.

தனுஷ் பேசும்போது
“நான் ப்ளஸ் ஒன் படித்த போது ‘குஷி’ படம் ரோகினி தியேட்டரில் பார்த்தேன். இப்போது விஜய்சார், சூர்யாசார் உடன் நான் அமர்ந்திருப்பதில் பெருமையாக இருக்கிறது.

சூர்யாசார் பேசுவதே பாடுவது மாதிரி இருக்கும், அவர் இசையமைப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. அவரது படங்களில் அவரது இசைஞானம் தெரியும்.அவர் படப்பாடல்களைக் கேட்டால் கேட்டு வாங்கியது தெரியும்

இன்றைக்கு ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் ஜெயிக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார். .”என்றார்.

விஜய் பேசும் போது
“எனக்கு ‘குஷி’க்கு முன் வாழ்வா சாவா என்கிற நிலை இருந்தது. இந்தப்படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற  கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் ‘குஷி’ என்கிற வெற்றிப்படம் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யாசார். இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன். ‘குஷி’ ரீலீசானவுடன் விக்ரமன் சார் கேட்டார் எப்படி விஜய் இதை ஏற்றுக் கொண்டு நடித்தீர்கள் கதை என்ன இருக்கு?கதையே இல்லையே? என்றார்.நான் சொன்னேன் சரிதான் ஆனால் எஸ்.ஜே..சூர்யா என்று ஒருத்தர் இருக்கிறார் என்றேன். அவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார். ‘நண்பன்’ சமயம் ‘இசை’படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.”என்று மனம் திறந்து பேசி நன்றியுடன் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் எஸ்,ஜே.சூர்யா பேசும்போது

” ‘வாலி’ யாகட்டும் ‘குஷி’ யாகட்டும் என்படத்தில் கதாநாயகனுக்கு சமமாக கதாநாயகிக்கும் பங்கு இருக்கும். ‘இசை’ யிலும் அப்படித்தான். இதில் சாதாரண கதாநாயகியைத் தேட வில்லை. அந்தக் கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கும் நடிகையைத்தான் தேடினேன். பல மொழிகளில் 4 மாதம் தேடி 124 பேரில் தேர்வானவர்தான் இந்த சாவித்ரி. இவர்  நடிகையர் திலகம் சாவித்ரியம்மா போல இருந்தார்.சமகால  சாவித்ரி போல  தோன்றினார்.நிச்சயம்அந்த சாவித்ரி போலவே புகழ் பெறுவார்.

இன்று ஒரு பிராந்திய மொழியில் 100 கோடிரூபாய் வசூல் செய்யுமளவுக்கு உயர்ந்துள்ள விஜய்சார் இங்கு வந்துள்ளது மகிழ்ச்சி பழக்கமில்லை என்றாலும் விழாவுக்கு கூப்பிட்டதும் தயக்கமில்லாமல் எப்போ என்றார். தனுஷ்சார்.இங்கு வந்துள்ளது மகிழ்ச்சி

சத்யராஜ் சார் இல்லை என்றால் இந்தப்படம் முழுப்படமாக வந்திருக்காது. ரஜினிசார், சத்யராஜ்சார், ஷாருக்கான்சார் ஆகியோரிடம் உள்ளுக்குள் இருக்கும் தனித்துவம் வரும்.இதிலும் வந்துள்ளது.

‘இசை’ படத்தில் இசையமைப்பளராக நடிக்க இசைப்பயிற்சி எடுக்க விரும்பினேன். அப்போது ஏஆர்.ரகுமான்சார் ‘நடிப்பது என்ன ஏன் நீங்களே இசையமைக்கக் கூடாது?’ என்று ஊக்கமும் நம்பிக்கையும்  கொடுத்தார்.நான்  இசையமைப்பளராக அவர்தான் காரணம்.” இவ்வாறு எஸ்:ஜே.சூர்யா பேசினார்.

தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின், இயக்குநர் விஷ்ணு வர்தன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோரும் பேசினார்கள்.

Leave a Response