ஏழு தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து நீண்ட இழுபறிக்குப்பின் உச்சநீதிமன்றம் நீதிமன்றம் இதில் தலையிடாது மாநில அரசும் ஆளுநரும் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தது.

இதனை அடுத்து தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

தீர்மானத்தின் மீது முடிவெடுக்க பல அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைத்தன. ஆனாலும் 7 பேர் விடுதலை கிணற்றில் விழுந்த கல்லாக இருந்தது.

இந்நிலையில் 7 பேர் விடுதலையில் முடிவெடுக்கவேண்டிய ஆளுநர் விடுதலை முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் முதல்வரிடம் அதை ஆளுநர் சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இதனையடுத்து இந்தத்தகவல் உண்மையா? என அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்,இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது….

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response