கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநரும் நடிகருமான சேரன் பங்குபெற்றார்.
அவருக்கு நிறைய ஆதரவும் அதே அளவு எதிர்ப்பும் இருந்தது.
இந்நிலையில் சில நாட்கள் முன்பாக அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
வெளிவந்த பின்பு முதன்முறையாக அவர் விடுத்துள்ள செய்தி….
தலைவணங்கி நிற்கிறேன்..
எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..
நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.