திடீரென டிரெண்டான சசிகலா – பிறந்தநாளில் திருப்பம்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. ஜெ மறைவுக்குப் பின்னர் நடந்த அரசியல் காரணமாக, சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

சுமார் 30 ஆண்டு காலமாக ஜெவுடன் இருந்த சசிகலா அதிமுக கட்சியின் அசைக்க முடியாத ஆளுமையாகவும் இருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பை வெளியிட்டது. அதில் ஜெயலலிதா மறைந்த காரணத்தினால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சசிகலா, அவரது அண்ணன் மனைவி இளவரசி, அவரது அக்கா மகன் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் பெங்களூரு பரபரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2017 பிப்ரவரியில் சிறை சென்றார் சசிகலா.

அவருக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிரந்தநாள். 2017, 2018 ஆம் ஆண்டு அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் பெரிதாக இல்லை. ஆனால் அதற்கு மாறாக இவ்வாண்டு அவருடைய பிறந்த நாளை தினகரன் கட்சியினர் கொண்டாடிவருகின்றனர்.

ட்விட்டரில் #HBD_ராஜமாதா #HBD_Chinnamma ஆகிய குறியீட்டுச் சொற்களை உருவாக்கி அவருடைய பெருமைகளைப் பேசுகின்றனர். பழைய புகைப்படங்கள் காணொலிகளையும் பதிவிட்டு வருகின்றனர். இவை இந்திய அளவில் ட்ரெண்டாகின.

அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave a Response