கமலுக்காக செலவு செய்தது மோடியா? எடப்பாடியா?

கன்னிங்காக காய் நகர்த்தி,கமுக்கமாக திரை மறைவு அரசியல் நடத்துவது என்பது.,கமலஹாசனை பொறுத்த வரை,பாரம்பரிய வழிமுறையில் கைவரப் பெற்ற
மரபார்ந்த ஞானமாகும்!

கமலஹாசனுடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு என்பது அலட்சியப்படுத்திவிடக் கூடிய ஒரு நிகழ்வல்ல…!

அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் ஒரு அரசியல் தரகர்!

ஆனால், நவீன டிஜிட்டல் யுகம் அவருக்கு அரசியல் ஆலோசகர் என்று பெயரிட்டு கவுரவப்படுத்துகிறது. இவர் அரசியல் ஆலோசனை சொல்வதோடு நிறுத்துவதில்லை. அதை நடை முறைபடுத்தி தருவதற்காக இந்தியல் பொலிடிகல் ஆக்‌ஷன் கமிட்டி என்ற பெயரில் அமைப்பும் வைத்துள்ளார்.

அத்துடன், ’’பொறுப்புள்ள நிர்வாகத்திற்கான குடிமக்கள்’’ அமைப்பு ஒன்றையும் நடத்துகிறார்.இந்த அமைப்பு இவர் விரும்பும் அரசியல் சூழலை கட்டமைத்து வளர்ப்பதற்கானது. அதாவது அறிவு தளத்தில்,சமுக தளத்தில் சில விஷயங்களை திசை மாற்றி விவாதமாக்கி , தன் பொலிடிகல் கஷ்டமரை வளர்த்தெடுப்பதற்கான நோக்கம் கொண்டது.

இவரது ஆலோசனையை பெற்றே, மோடி ஒரு முறை குஜராத் முதல்வராகவும், பிறகு பிரதமராகவும் வெற்றி வாகை சூடினார்.

நிதிஷ்குமாரின் பீகார் வெற்றியிலும் இவரது பங்களிப்பு உண்டு .சமிபத்தில் ஆந்திராவில் வெற்றி பெற்ற ஜகன் மோகன் ரெட்டியும் இவரது கஷ்டமர் தான்!

இந்த பிரசாந்த் கிஷோரைத் தான் சமிபத்தில் டெல்லி சென்று மோடியை சந்தித்த பிறகு, எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்துள்ளார். எடப்பாடி சந்தித்த பிறகு ,பிரசாந்த் கிஷோர் சென்னை புறப்பட்டு வந்து கமலஹாசனை சந்தித்துள்ளார். இரண்டு மணி நேரம் நீண்ட நெடிய ஆலோசனையையும் நடத்தியுள்ளார்.

பிரசாந்த் கிஷோரை பொறுத்த வரை , பணம் இல்லாமல் ஒரு நொடியையும் யாருக்கும் தரமாட்டார்.

கமலஹாசனை பொறுத்த வரை எவ்வளவு பயன் பெற்றாலுமே கூட, அவ்வளவு சுலபத்தில் நயாபைசாவைக் கூட ஈய மாட்டார் ( ஏதோ நான் காழ்புணர்ச்சியால் சொல்லவில்லை.இது, அவரிடம் நெருங்கி பழகிய நண்பர்கள் என்னிடம் பலமுறை உறுதிபடுத்திய உண்மை! )

இந்த யதார்த்தத்தை கணக்கில் கொண்டு பார்க்கையில் கமலஹாசனின் கிஷோர் சந்திப்புக்கு எடப்பாடியோ, மோடியோ தான் செலவை ஏற்றிருக்க வேண்டும்!

கமலஹாசனின் தி மு க எதிர்ப்பில் உள்ள உறுதிப்பாடும்,

கடந்த கால ஜெயலலிதா ஆட்சியை விமர்சிக்காத அணுகுமுறையும்,

பா ஜ கவின் மதவாத ஆட்சி குறித்த ,மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்த,விமர்சனமற்ற போக்கையும் மனதில் இருத்தி,இந்த சந்திப்பை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

– சாவித்திரி கண்ணன்.

Leave a Response