தமிழ் தெரியாதவர்க்கு தமிழக அரசு வேலை – அமைச்சர் ஒப்புதல் மக்கள் கொதிப்பு

நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறார் நீதி குழுமத்தில் நூலகம் அமைக்க புத்தகங்களை வழங்கும் விழா, கல்லூரி மாணவர்களுக்கான student cyber warrior அமைப்பு ஆகியவற்றின் துவக்க விழா நாமக்கல்லில் நடைபெற்றது.

தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் விபரங்கள் கணக்கெடுத்து வருவதாகவும் முதல் கட்டமாக 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் கேங் மேன்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தான் வெளி மாநிலத்தவர்கள் மின் வாரியத்தில் பணி அமர்த்தப் பட்டுள்ளதாகவும், அவர்கள் 2 ஆண்டுக்குள் தமிழ் கற்று கொள்ளவிட்டால் தகுதி இழப்பர் எனவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

இதன்மூலம் தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர்க்கு வேலை கொடுத்ததை அமைச்சர் ஒப்புக்கொண்டதும் அவர்களுக்கு தற்போது தமிழ் தெரியாதென்பதும் உறுதியாகியுள்ளது.

மேலும் அவர்களுக்கு தமிழ் கற்றுக்கொள்ள இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளித்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.

இதனால் தமிழக மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

Leave a Response