ஷிகர் தவான் விராட் கோலி அதிரடி – தெறிக்கவிட்ட இந்திய அணி

உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் என ஆசிய நாட்டு அணிகள் உள்பட 10 அணிகள் இத்தொடரில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இத்தொடரின் 14-வது லீக் ஆட்டம் இன்று இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரர்களா களமிறங்கிய ஷிகர் தவான் 117(109) மற்றும் ரோகித் சர்மா 57(70) ரன்கள் குவித்து அணிக்கு பலமான துவக்கத்தை அளித்தனர்.

இவர்களை தொடர்ந்து வந்த விராட் கோலி 82(77), ஹர்டிக் பாண்டயா 48(27), தோனி 27(14) ரன்கள் குவித்து அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர்.

இதன்மூலம் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மார்கஸ் ஸ்டோனிக்ஸ் 2 விக்கெட் குவித்தார்.

இதனையடுத்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடவுள்ளது.

Leave a Response