தூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா?

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் தமிழக அரசின் போக்கு இன்றுவரை தொடரவே செய்கிறது.

கடந்த வருடம் இதே மே 23ம் நாளில் அமைதியான முறையில் பேரணி சென்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது. அதில் 13 பேர் இறந்தனர். பலர் கொடிய தடியடி தாக்குதலுக்கும் உள்ளானர்கள்.

இந்த கொடிய தாக்குதலுக்கு பின் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பல ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். பொது கூட்டம் நடத்தும் ஜனநாயக உரிமை கூட தொடர்ச்சியாக அந்த பகுதியில் மறுக்கப்படுகிறது.

துப்பாக்கி சூடு நடந்து ஒரு வருடம் கடந்த நிலையில், இறந்தவர்கள் நினைவு கூறும் நிகழ்ச்சிக்கான அனுமதி கூட தமிழகம் எங்கும் மறுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் இன்று நடைபெற இருந்த நினைவு கூட்டத்திற்கு செல்ல இருந்த திரு சுப.உதயகுமார் கைதி செய்யப்பட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு துப்பாக்கி சூடு நிகழ்வு குறித்தான விசாரணை சி.பி.ஐ – யிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக காவல்துறையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில், ஸ்டெர்லைட்க்கு ஆதரவாகவே தற்போதைய அரசு செயல்பட்டு வந்துள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செயல்பாட்டை நிறுத்த, வலுவான சட்ட காரணங்கள் இருந்த போதிலும் அதனை பயண்ப்படுத்த தவறியது தமிழக அரசு. ஸ்டெர்லைட் நிறுனத்தை செயல்நிறுத்தம் செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. தனி சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.

அரசின் கடும் ஒடுக்குமுறையில் உள்ள தூத்துக்குடி வாழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க மக்கள் இயக்கம் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை உள்ளது.

– பூவுலகின் நண்பர்கள்
வழ. வெற்றிச்செல்வன்

Leave a Response