கமல் மோடி கூட்டுச்சதி – இதற்குத்தான் இந்த நாடகமா?

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்கிற கமலின் பேச்சும் அதற்கு பாஜக அதிமுகவினர் எதிர்ப்பும் திட்டமிடப்பட்ட நாடகம் என்றே மக்கள் நினைக்கிறார்கள்.

சமூகவலைதளங்களில் இது பற்றி நிறையக் கருத்துகள் உலாவருகின்றன. அவற்றில் இரண்டு இங்கே….

ராஜேஷ் கண்ணன் –

தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளை முக்கியமா 242 ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்ட மத்திய அரசு அனுமதியளித்ததற்கு அப்பகுதி மக்கள் போராட்டத்தின் மீது யாரும் கவனத்தை வைக்கக்கூடாது என்பதற்காகவே கமல் இந்தமாதிரியா பேசியிருக்காப்ல பிஜேபியின் துணையோடு. எதிர்பார்த்த மாதிரி சன்நியூசு சேனல் தவிர வேறு எந்த ஊடகம் ஹைட்ரோ கார்பன் பிரச்சினையை பற்றி பேசவில்லை

கோதண்டராமன் சபாபதி –

” சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி”

மூன்றே ஷாட்களை கொண்ட குறும்படம்.

மூன்று ஷாட்களை வெவ்வேறு லொகேஷன்களில் எடுத்து மிகச்சரியாக இணைத்ததில் தெரிகிறது இந்த குறுப்படத்தின் இயக்குநரின் திறமை.

RSS பிக்கஸர்ஸ் வெளியீடான இப்படம் வெளியிடப்பட்டது தென்னக திரையரங்குகளில்தான் எனினும் இது வசூலை எதிர்பார்ப்பது வட இந்திய திரையரங்குகளில்தான்.

இதன் பொருட்டே இதன் மூன்று நடிகர்களில் ஒருவராக இந்தி பேசும் நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கமலும், ராஜேந்திர பாலாஜியும் தத்தமது ரோல்களில் வெலுத்துவாங்க ஏற்கனவே ஜியோ விளம்பரப்படத்தில் நடித்து அசத்திய மோடி முன்னிருவரையும் நடிப்பில் தூக்கிச்சாப்பிடுகிறார்.

பலர் கமல் கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்ததாக நினைக்கிறார்கள்.

மோடி அவர்களையே இந்த படத்தில் நடிக்கவைத்திருப்பதால் இது பெரிய பட்ஜெட் படம் என்பதும் கமல் தான் இதுவரை நடித்த படங்களுக்கு வாங்கியதைவிட கூடுதலாகவே சம்பளம் வாங்கியிருப்பார் என்பதும் தெளிவு.

சற்றே குழப்பமான திரைக்கதையினால் ரசிகர்கள் ஏமாந்துவிடுவதால் சிலர் கமல்தான் ஹீரோ மோடி வில்லன் என்றும் சிலர் மோடி நாயகன் கமல் வில்லன் என்றும் குழப்பிக்கொண்டுள்ளனர்.

பெரியார் புத்தகங்களை அதிகம் படித்து பரிச்சயம் பெற்றவர்களால் இது ஒரு “மங்காத்தா” ஸ்டைல் படம் என்பதும் நாயகர்கள் போல் தெரியும் அனைவருமே வில்லன்கள்தான் என்பதை புரிந்து கொள்ளவது எளிது.

இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்.

Leave a Response