கைது பயம் எதிரொலி – முன்பிணை கோரினார் கமல்

அரவக்குறிச்சியில் தேர்தல் பரப்புரையின் போது மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலைத் தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ததன் விளைவு 13 க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை இரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது.

அப்போது, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்குத் தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் பிணை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response