கூட்டணிக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கினார் கமல்

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக, அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து பரப்புரையைத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.

அரவக்குறிச்சி தொகுதியில் மோகன்ராஜ் என்பவரும், சூலூர் தொகுதியில் மயில்சாமி என்பவரும் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், சக்திவேல் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள வளரும் தமிழகம் கட்சிக்கு, ஒட்டப்பிடாரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகுதியில் வளரும் தமிழகம் சார்பில், காந்தி என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response