எல்லோருக்கும் முன்னுதாரணமானது ஈரோடு- நடிகர் சூர்யா பேச்சு.

ஈரோட்டில் தொழிலதிபர்கள் பலர் ஒன்றிணைந்து ‘ஒளிரும் ஈரோடு’ என்கிற அமைப்பை துவங்கியுள்ளனர். கலாச்சாரம், நன்னெறி, கல்வி, உடல்நலம் ஆரோக்கியம், நீர் நிர்வாகம், சுகாதாரம், உள்கட்டமைப்பு உள் ளிட்ட பணிகளை அரசின் உதவியோடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்ட இந்த அமைப்பின் துவக்கவிழா  நடைபெற்றது.

இதனை துவக்கி வைத்து பேசிய நடிகர் சூர்யா “ இவ்வளவு பேரும் ஒன்று சேர்ந்து ஈரோட்டை மாற்றி காமிக் கிறோம் பாருங்கள் என்று இங்கு கூடியிருக்கிறோம். ரெண்டு மாதத்துக்கு முன்னாடி ‘ஒளிரும் ஈரோடு’ என் கிற புதிய அமைப்பை ஏற்படுத்தி ஈரோட்டில் வளர்ச்சி பணிகளை செய்யப்போறோம். நாம சேர்ந்து பண்ண லாம்னு என்கிட்ட சொன்னாங்க. நானும் பண்ணலாம். ஃபோன்ல பேசிக்கலாம்னு சொன்னேன். நேர்லயே வர்றோம்னு சொல்லி பலகோடிகள் டர்ன் ஓவர் பண்ற அத்தனை பேரும் வீட்டுக்கு வந்தபோதுதான் அதோட சீரியஸ்னஸ் புரிஞ்சது.

எனக்கு ஈரோடு புதுசு கிடையாது. 40 வருஷமா ஈரோட்டை பாத்துகிட்டு இருக்கிறேன். மத்த ஊர்களைக் காட்டிலும் எல்லா விஷயத்திலும் ஈரோடு முன்னுதாரணமான ஊருதான். இந்த ‘ஒளிரும் ஈரோடு’, அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோக போகுது. நம்முடைய மண்ணாகட்டும், தொழிலாகட்டும், உறவாகட் டும் எல்லாவற்றிலும் அதீத அன்பு அதீத காதல் அதீத பிரியம் இருக்கணும். அப்பதான் நாம செய்யுற எந்த விஷயமும் சக்ஸசா அமையும். காலிங்கராயன் ஓடை, பெரியபள்ளம் ஓடை என்ற இரண்டு ஓடைகள் சேர்ந்த ஈரோடைதான் ஈரோடு என்ற பெயர் வந்துச்சி.

1927ல் காந்தியடிகள் உயிரோடு இருக்கும்போதே சிலைவைத்து மரியாதை செலுத்திய ஊர் இந்த ஊர். தந்தை பெரியார் பிறந்த ஊர் , புரட்சியும் அமைதியும் கலந்த ஊர்தான் ஈரோடு. 900 ஆண்டுகளுக்கு முன்னா டியே கட்டாயக்கல்வி வேணும்னு சொல்லி அதை நடத்திக்காட்டியது ஈரோடுதான் அதனால்தான் இங்கு ஸ்கூல்ஸ், காலேஜஸ் அதிகமா இருக்கு.

புத்தகவிழாவை எடுத்துகிட்டா சென்னைக்கு அடுத்தபடியா ஈரோடுதான். ஊருக்கு நல்ல விஷயம் பண்றதுனா நீங்கதான் முன்னாடி வந்து நிப்பீங்க. இந்த மாதிரி ஒரு அழகான, தெளிவான எதிர்காலத்தை நோக்கி இனிமேல் ஒன்றுசேர்ந்து பண்ணுவாங்களானு தெரியாது.

இப்போ ஒண்ணு சேர்ந்தாச்சி. இனிமேல் ஈரோடு ஒளிரணும். இதை முன்னுதாரணமாக வைத்து மற்ற மாவட்டங்களிலும் ‘ஒளிரும் திருப்பூர், ஒளிரும் கோவை, ஒளிரும் தர்மபுரி’ன்னு எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற அமைப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

Tags:

Leave a Response