நடிகர் ஜே.கே.ரித்தீஷ் திடீர் மரணம் திரையுலகம் அதிர்ச்சி

முன்னாள் தி.மு.க. எம்.பி யும் திரைப்பட நடிகருமான ஜே.கே. ரித்தீஷ் இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது (வயது 48).

இலங்கை கண்டியில் 1971 ஆம் ஆண்டு பிறந்தவரான இவருக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

இராமநாதபுரத்தில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த கானல்நீர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து மக்களிடையே அறிமுகம் ஆனபின் நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக எல்.கே.ஜி. என்ற படத்தில் நடித்துள்ளார்.

தி.மு.க.வில் இருந்த அவர் கடந்த 2014ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து அக்கட்சியின் முதன்மை உறுப்பினரானார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் திடீரென அவர் இன்று காலமானார்.

Leave a Response