பட்லரால் பஞ்சரான மும்பை – ராஜஸ்தான் வெற்றி

ஐபிஎல் 12 – மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 27 ஆவது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 13) மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்தது.

மும்பை அணியில் அதிகபட்சமாக குவின்டன் டி காக் 81 (52) ரன்கள், ரோகித் சர்மா 47 (32) ரன்கள், ஹர்திக் பாண்டியா 28 (11) ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட், தவால் குல்கர்னி மற்றும் ஜெய்தேவ் உனட்கட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து (188 ரன்கள்) இலக்கை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ராஜஸ்தான் அணியில், அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 89 (43) ரன்கள் விளாசினார். ரஹானே 37 (21) ரன்கள், சஞ்சு சாம்சன் 31 (26) ரன்கள் எடுத்தனர்.

மும்பை அணியில் கிருணல் பாண்டியா 3 விக்கெட், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட், ராகுல் சாஹார் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Response