விஸ்வரூப விராட்கோலி – கெயிலின் அதிரடியை மீறி அபாரவெற்றி

ஐபிஎல் 12, மொகாலியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 28 ஆவது லீக் போட்டி ஏப்ரல் 13 இரவு எட்டு மணிக்கு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 99 (64) ரன்கள் எடுத்தார். லோகேஷ் ராகுல் மற்றும் மன்தீப் சிங் 18 ரன்கள் எடுத்தனர்.

பெங்களூர் அணியில் சாஹல் 2 விக்கெட், மொயின் அலி மற்றும் முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 19.2 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து (174 ரன்கள்) இலக்கை எட்டியது.

இதனையடுத்து பெங்களூர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது.

பெங்களூர் அணியில் சிறப்பாக விளையாடிய விராட்கோலி 67 (53) ரன்கள், டிவில்லியர்ஸ் 59 (38) ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் அணியில் ஆர்.அஸ்வின் மற்றும் முகமது ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Response