2019 தேர்தல் – முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

2019 மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று (ஏப்ரல் 11,2019) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பீகார் 4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தரபிரதேசம் 8, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகள் முதல்கட்டத் தேர்தலைச் சந்திக்கின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகியவை இன்று ஒரே கட்டத் தேர்தலைச் சந்திக்கின்றன.

ஒடிசாவில் மட்டும் 28 சட்டப்பேரவை தொகுதிகளில் வரும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. எஞ்சிய தொகுதிகளில் ஏப்ரல் 18, 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இன்று காலை 7 மணிக்கு மக்களவை பொதுத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் நடைபெறும் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் 1,300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Leave a Response