ரஜினி பலிகடா ஆகிறார் – வருந்தும் அரசியல் தலைவர்

தமிழக காங்கிரசுக் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் ஏப்ரல் 10 அன்று செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது…..

தி.மு.க.-காங்கிரசு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரசுத் தலைவர் ராகுல்காந்தி ஏப்ரல் 12 ஆம் தேதி(நாளை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி, மதியம் 1 மணிக்கு சேலம், மதியம் 3 மணிக்கு தேனி, மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.

காங்கிரசுக் கட்சி தேர்தல் வாக்குறுதியான மாதம் ரூ.6 ஆயிரம் வருமான உறுதித் திட்டம் ‘கஜா’ புயலை விட வேகமாகப் பரவி இருக்கிறது.

நான் நடிகர் ரஜினிகாந்த் ரசிகன். நான் தேர்தலில் அவருடைய ‘அண்ணாமலை’ சைக்கிளை வைத்து வெற்றி பெற்றிருக்கிறேன். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு அறிவிப்பை ரஜினிகாந்த் வரவேற்றிருப்பது, அவர் ஒரு சார்பாக இருக்கிறாரோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நதிநீர் இணைப்புத்திட்டம் சாத்தியமில்லை. எதையாவது கவர்ச்சி அறிவிப்புகள் மூலம் வாக்குகளைப் பெற முடியாதா? என்று பா.ஜ.க. எண்ணுகிறது. இதில் ரஜினிகாந்த் பலிகடா ஆகிறார் என்பது தான் வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response