பாஜகவுடன் இணக்கமாக டிடிவி.தினகரன் முயற்சி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

அதில், பாஜகவின் சார்பில் கருப்பு முருகானந்தம் தம்மைத் தொடர்பு கொண்டதாகக் கூறினார். நெல்லை, குமரி தொகுதிகளில் சிறுபான்மை வேட்பாளர்களை நிறுத்துமாறு தம்மை பாஜக வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

மேலும், கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, தமிழகத்தில் 37 தொகுதிகளை அமமுக வெல்லும் என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கருப்பு முருகானந்தம், தினகரனுடன் பேசியது உண்மைதான் என்றாலும் வேட்பாளர் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறினார்.

மேலும், பாஜகவுடன் இணக்கமாகும் முயற்சி தோல்வியடைந்ததால் தினகரன் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

Leave a Response